லடாக்கில் நான்கு இடங்களில் பின்வாங்கிய சீனா? – எங்கிருந்து என்று தெரியாததால் குழப்பம்

 

லடாக்கில் நான்கு இடங்களில் பின்வாங்கிய சீனா? – எங்கிருந்து என்று தெரியாததால் குழப்பம்

லடாக்கில் சீனா நான்கு இடங்களில் இருந்து பின்வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்திய நிலப் பரப்பில் எங்கும் ஆக்கிரமிப்பு நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிய நிலையில் அவர்கள் எங்கே பின்வாங்கினார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

லடாக்கில் நான்கு இடங்களில் பின்வாங்கிய சீனா? – எங்கிருந்து என்று தெரியாததால் குழப்பம்லடாக் மாநிலத்தில் கல்வான் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ததாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக இந்தியா – சீனா தரப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். பதற்றமான சூழல் ஏற்பட்டது. சீனா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று தேச பக்தர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்திய நிலப் பரப்பை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று மோடி அறிவித்தார். எல்லை விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ கமாண்டர் நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு எட்டப்படாத நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

லடாக்கில் நான்கு இடங்களில் பின்வாங்கிய சீனா? – எங்கிருந்து என்று தெரியாததால் குழப்பம்வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளில் அமைத்த தற்காலிக கூடாரங்கள், கண்காணிப்பு கோபுரங்களை சீனா அகற்றிவிட்டு பின்வாங்கியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்கோங் ஆகிய பகுதிகளில் இருந்து சீனா 600 மீட்டர் தொலைக்கு பின்வாங்கியதாக கூறப்படுகிறது. பல கி.மீ தூரத்துக்கு சீனா ஆக்கிரமித்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், வெறும் 600 மீட்டர் தூரத்துக்கு சீனா பின் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

லடாக்கில் நான்கு இடங்களில் பின்வாங்கிய சீனா? – எங்கிருந்து என்று தெரியாததால் குழப்பம்இது தவிர பாங்கோங் ஏரி, டெஸ்பாங் சமவெளி பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இந்தியாவும் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. சீனா முழுமையாக இந்திய நிலப்பரப்பை விட்டு வெளியேறும் வரை அழுத்தம் தர வேண்டும். அதே நேரத்தில் சீனா எங்கிருந்து பின் வாங்கியது என்ற தகவலை அரசு கூற மறுக்கிறது. சீனா தன்னுடைய எல்லையில் இருந்து பின்வாங்க பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறதா, ஆக்கிரமித்த பகுதியை மீட்க பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறதா என்று பிரதமர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வழக்கமான தேசபக்தியை வைத்து அதை மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் வற்புறுத்துகின்றனர்.