சீனாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று – மீண்டும் கொரோனா ஆபத்தில் சீனா?

 

சீனாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று – மீண்டும் கொரோனா ஆபத்தில் சீனா?

பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சீனாவில் 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்திலிருந்து மிக அதிகமான தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஆகும். சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியிருப்பது குறித்து உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 36 பேர் சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

சீனாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று – மீண்டும் கொரோனா ஆபத்தில் சீனா?

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 78 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 40 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது.