’3800 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது’ பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு

 

’3800 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது’ பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு

சீனா ராணுவம் இந்தியாவில் ஆக்கிரமித்தை நிலம் குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் நமக்கும் இடையே எல்லை பிரச்சினைகள் அவ்வப்போது நடக்கும். பெரும்பாலும் பாகிஸ்தானோடுதான்.

ஜவகர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த 1962-ம் ஆண்டில் சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லை பிரச்சினை தொடர்பாக சண்டை நடைபெற்றது. அது குறித்து இப்போதும் பல விவாதங்கள் நடைபெறுகின்றன.

’3800 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது’ பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு

அதன்பின் பெரியளவில் சீனாவுடன் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் குறிப்பாக கிழக்கு லடாக் பகுதியில் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

சீன எல்லைப் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அதில், லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த  சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக  ஆக்கிரமித்துள்ளது என்று தெரிவித்த அவர்,  மேலும்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன் படி பாகிஸ்தான் சீனாவுக்கு சட்ட விரோதமாக கொடுத்துள்ளது என்றும் கூறினார். 

’3800 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது’ பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு

அருணாச்சலப்  பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லைப் பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடுவதாக அவர் கூறினார். 

1993 மற்றும் 1996 உடன்படிக்கைகளின்படிஎல்ஏசி நெடுகிலும்இருதரப்பு பகுதியில் குறைந்தபட்ச அளவுக்கு தங்கள் படைகளை நிறுத்திக்கொள்ளலாம் என்றும்,  எல்ஏசி-யை இருதரப்பும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்புகொள்ளப்பட்டது.

ஆனால்இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில்,  கல்வான் பள்ளத்தாக்கில்  நமது படைகள் வழக்கமான ரோந்து மேற்கொள்ள சீனப்படையினர் இடையூறு செய்ததால்தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்றும்,  மே மாத மத்தியில்மேற்கு பகுதியில் கொங்கா லாகோக்ராபான்காங் ஏரியின் வடகரை ஆகிய  இடங்களில்சீனத்தரப்பு நமது எல்லைக்குள் ஊடுவ பல முறை முயற்சிகள் மேற்கொண்டன என்றும் கூறிய  ராஜ்நாத் சிங்,  இந்த முயற்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து நமது ஆயுதப்படையினர் உரிய முறையில் பதிலடி கொடுத்ததாகக் கூறினார்.