இந்தியா அத்துமீறல், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்! – பழிபோடும் சீனா

 

இந்தியா அத்துமீறல், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்! – பழிபோடும் சீனா

இந்தியா தன்னுடைய ராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்த வேண்டும், அத்துமீறல், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று சீனா கூறியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1962ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்தியா மீது சீனா நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 20 வீரர்கள் உயிரிழந்ததாகவும் சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவமும் இறந்த 20 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால் சீனா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்த வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மோடி கூட்டியுள்ளார்.

இந்தியா அத்துமீறல், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்! – பழிபோடும் சீனாஇந்த நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “எல்லை தொடர்பான விவகாரங்களைப் பேச்சு வார்த்தை மூலமாக தீர்க்க இந்தியா முன்வர வேண்டும். இனி எந்த ஒரு மோதலையும் சந்திக்க சீனா விரும்பவில்லை. எல்லை பிரச்னைக்கு தூதரக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. எது சரி, எது தவறு என்பதில் சீன உறுதியாக உள்ளது. இந்திய ராணுவம் நெறிமுறைகளை மீறி சீன ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கால்வான் பள்ளத்தாக்கு பகுதியின் இறையாண்மை சீனாவுக்குத்தான் முழுவதும் சொந்தம். நடந்த சம்பவத்துக்கு சீனாவைக் குறைகூற முடியாது. இந்தியா தன்னுடைய ராணுவ வீரர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அத்துமீறல், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என்றார்