• February
    21
    Friday

Main Area

Main



சீனாவில் உலாவரும் 5ஜி... வர்த்தக போருக்கு மத்தியிலும் கிளுகிளுப்பில் சீனா!

5G
5G

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில் சீனாவில் 5 ஜி சேவை தொடங்க அரசுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 5 ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் 2 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மிக அதிவேக இணையத்தின் உதவியால் 30 விழுக்காடு வரை செயல்திறன் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 5 ஜி தொழில்நுட்பத்தை உற்பத்தி, மருத்துவம் என சகல துறைகளிலும் சீனா செயல்படுத்தி வருகிறது. சீனா டெலிகாம், சீனா மொபைல், சீனா யூனிகாம் மற்றும் சீனா வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றிற்கு, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது. 

5ஜி தொழில்நுட்பம் என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி யின் பதிவிறக்க வேகத்தை விட 10 முதல் 100 மடங்கு அதிவேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.