நிலாவில் கொடி நட்ட 2-ம் நாடு இதுதான்!

 

நிலாவில் கொடி நட்ட 2-ம் நாடு இதுதான்!

விண்வெளி ஆராய்ச்சிகள் என்றைக்குமே வியப்பானவைதான். வானத்தில் உள்ள நிலாவைப் பார்த்து கதைகள் உருவான காலம் போய் நிலாவுக்கே சென்று ஆய்வுகள் நடத்தும் காலம் வந்துவிட்டது. நிலாவில் முதன்முதலாக கால் தடம் பதித்த அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை நமக்குத் தெரியும்.

நிலவில் முதன்முதலாக தம் நாட்டு கொடியை நட்டதும் அமெரிக்காதான். இதுவரை ஐந்து முறை நிலவில் அமெரிக்கா தனது கொடியை நட்டிருப்பதாகக் குறிப்புகள் நமக்குச் சொல்கின்றன.

நிலாவில் கொடி நட்ட 2-ம் நாடு இதுதான்!

இந்த வியத்தகு சாதனையை தம் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் செய்ய வேண்டும். தம் நாட்டு கொடியும் நிலவில் ஊன்றப்பட வேண்டும் என ஒவ்வொரு நாடும் நினைப்பதும், அதற்கான முயற்சிகளைச் செய்வதும் இயல்புதான். அதில் ஒரு வெற்றியே பெற்றுவிட்டது சீனா.

நிலாவில் கொடி நட்ட 2-ம் நாடு இதுதான்!

ஆம். நிலவில் கொடி நட்ட இரண்டாம் நாடாக சீனா வரலாற்றுப் பக்கங்களில் தன்னை எழுதிக்கொண்டது. சாங்கே-5 விண்கலம் மூலமாக நிலவை அடைந்த சீன விண்வெளி வீரர்கள் தம் நாட்டுகொடியை நிலவில் நட்டார்கள். இதற்கு முன் பலமுறை கொடி நட நடந்த சீனாவின் முயற்சிகள் தோல்வி கண்டதால், இந்த வெற்றியை அவர்கள் குதூகலத்துடன் கொண்டாடுகிறார்கள்.

90 செண்டிமீட்டர் உயரமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட சீனாவின் கொடி, சூரிய வெப்பம், குளிர் உள்ளிட்டவற்றிலிருந்து எந்தச் சேதமும் அடையாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் எடை சுமார் ஒரு கிலோ இருக்கும்.

நிலாவில் கொடி நட்ட 2-ம் நாடு இதுதான்!

சீனாவில் இந்த வெற்றிக்குப் பல நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மற்ற நாடுகளின் முயற்சிகளும் இன்னும் வேகமெடுக்கும்.