“சின்ன ‘கேப்’ தான்… அது வழியா சீனா இந்தியாவுக்குள்ள நுழைஞ்சிடும்” – எச்சரிக்கும் முப்படை தலைமை தளபதி

“சின்ன ‘கேப்’ தான்… அது வழியா சீனா இந்தியாவுக்குள்ள நுழைஞ்சிடும்” – எச்சரிக்கும் முப்படை தலைமை தளபதி

தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாகவும், அதனைப் பயன்படுத்தி இந்தியா மீது சைபர் தாக்குதல்களைத் தொடுக்க சீனாவிற்கு சர்வ வல்லமை இருப்பதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

“சின்ன ‘கேப்’ தான்… அது வழியா சீனா இந்தியாவுக்குள்ள நுழைஞ்சிடும்” – எச்சரிக்கும் முப்படை தலைமை தளபதி

நேற்று ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், “சைபர் துறையில் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. சீனா புதிய தொழில்நுட்பங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதன் காரணமாகவே இந்தியா மீது சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தும் சக்தி சீனாவுக்கு இருப்பதாகக் கூறுகிறேன். அப்படி நிகழ்த்தப்பட்டால் இந்தியாவின் பெரும்பாலான அமைப்புகளை அவர்களால் சீர்குலைக்க முடியும். இதிலிருந்து இந்தியாவைப் பாதுகாப்பாக தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவோம்.

“சின்ன ‘கேப்’ தான்… அது வழியா சீனா இந்தியாவுக்குள்ள நுழைஞ்சிடும்” – எச்சரிக்கும் முப்படை தலைமை தளபதி

நாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தனியாக ஒரு சைபர் பிரிவு உள்ளது. சைபர் தாக்குதலால் எதாவது ஒரு அமைப்பு முடங்கினாலும்கூட, அதன் தாக்கம் நீண்ட நேரம் நீடிக்காது. மேற்கத்திய நாடுகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளும் நிலையை மாற்றி, நம்மைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ளும் நிலைமையை உருவாக்க வேண்டும்” என்றார்.