லடாக் எல்லையில் இருந்து 2 கி.மீ தூரம் பின்வாங்குகிறதா சீன ராணுவம்?

 

லடாக் எல்லையில் இருந்து 2 கி.மீ தூரம் பின்வாங்குகிறதா சீன ராணுவம்?

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.

லடாக் எல்லையில் இருந்து 2 கி.மீ தூரம் பின்வாங்குகிறதா சீன ராணுவம்?

திடீர் தாக்குதலால் பதற்றம் நிலவும் சீன எல்லையான லடாக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரமதர் மோடி திடீர் ஆய்வு கொண்டார். அப்போது தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று வீரர்களை நலம் விசாரித்தார். மேலும், இந்திய ராணுவத்தை கண்டு சீன ராணுவம் பயந்து விட்டதாகவும், பதற்றம் அதிகரித்தால் களத்தில் சந்திக்க இந்தியா தாயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில் சீன ராணுவம் லடாக் எல்லையில் இருந்து 2 கி.மீ பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூடாரத்தை அகற்றி வாகனங்களுடன் சீன வீரர்கள் பின்வாங்குவதாகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் சீன வாகனங்கள் இன்னும் கல்வான் பள்ளத்தாக்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆயுதங்களுடன் இருக்கும் வாகனங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.