குழந்தையின் கை விரல் துண்டிப்பு- மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

 

குழந்தையின் கை விரல் துண்டிப்பு- மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் கை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் 2 வாரத்திற்குள் பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

குழந்தையின் கை விரல் துண்டிப்பு- மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

காட்டூரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கணேசன்- பிரியதர்ஷினி தம்பதிக்கு, கடந்த மாதம் 25 ஆம் தேதி , ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் கையில், குளுக்கோஸ் ஏற்றுவதற்காக ஊசியுடன் இணைத்து போட்டிருந்த பேண்டேஜை, கைகளால் அகற்றுவதற்கு பதில் செவிலியர் ஒருவர் கத்திரிக் கோலால் அகற்றினார்.

செவிலியரின் அலட்சியத்தால் குழந்தை கையின் பெரு விரல் துண்டானது. தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு குறித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது