ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

 

ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர், தனது வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் மனைவி பிரியதர்சினி மற்றும் மகள், இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இதனிடையே, உடல்நலக்குறைவால் 3 மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் உயிரிழந்தார். இந்த நிலையில், ராமதாஸ் வாங்கிய கடனை அடைக்கும்படி பிரியதர்சினிக்கு அவர்கள் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர். கடன்காரர்கள் வீட்டிற்கு வருவதை மாமியார் வசந்தா விரும்பவில்லை. இதனால், வீட்டை காலி செய்யுமாறு பிரியதர்சினியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் வீட்டை காலி பண்ண மறுத்துவிட்டார்.

இதனிடையே, வசந்தாவும் அவரது தம்பி ராஜேந்திரனும், பிரியதர்சினியையும், அவரது 16 வயது மகள் பர்வதவர்த்தினியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த பிரியதர்சினி, அவரது 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துவிட்டார். இதில், பிரியதர்சினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிள்ளைகள் 3 பேரும் கவலைக்கிடமான நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு பக்கம் கடன்காரர்களின் தொல்லை. மறுபக்கம் வீட்டை காலி செய்யும்படி மாமியாரின் தொல்லை. இந்த வேதனையால் தனது பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு தாயார் முயன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.