‘இந்த வயது குழந்தைகளை’ அதிகம் பாதிக்கும் கொரோனா.. மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை!

 

‘இந்த வயது குழந்தைகளை’ அதிகம் பாதிக்கும் கொரோனா.. மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீப காலமாக கொரோனாவால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதே போல, மூன்றாம் அலையிலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில், 1 முதல் 10 வயதுடைய குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படும் விகிதம் கடந்த 5 மாதங்களில் 2.80%ல் இருந்து 7.04% ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘இந்த வயது குழந்தைகளை’ அதிகம் பாதிக்கும் கொரோனா.. மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை!

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 1-10 வயதுடைய குழந்தைகள் பாதிக்கப்படுவது 3.59% ஆக மட்டுமே இருந்துள்ளது. ஆனால், மார்ச் மாதத்திற்கு பிறகு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. மாநில வாரியாக பார்த்தால் மேகாலயா – 9.35%, மணிப்பூர் – 8.74%, சிக்கிம் – 8.02%, கேரளா – 8.62%, அருணாச்சலப் பிரதேசம் – 7.38%ஆக உள்ளது. டெல்லியி, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறைவாகவே உள்ளது.

இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் பாதிப்பின் அளவு குறைவாகவே இருக்கிறது. கொரோனாவில் இருந்து மீளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. கொரோனாவால் பெரியவர்கள் பாதிப்பது குறைவதால் குழந்தைகள் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கிறது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.