அடம் பிடிக்கும் குழந்தையை அடிப்பது மட்டும்தான் ஒரே வழியா? #ParentingTips

 

அடம் பிடிக்கும் குழந்தையை அடிப்பது மட்டும்தான் ஒரே வழியா? #ParentingTips

’அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான்’

நம்முடைய வாழ்வில் பழமொழிகள் பயன்படுத்துவது ரொம்பவே குறைந்துவிட்டது. அதற்கு காரணம், நாம் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும்போது பழமொழிக்கான தேவை இல்லாமல் போய்விடுகிறது. சரி. இது மொழியைப் பயன்படுத்துவதற்கான கட்டுரை அல்ல. மேலே உள்ள பழமொழியிலிருந்து முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசலாம். 

அடம் பிடிக்கும் குழந்தையை அடிப்பது மட்டும்தான் ஒரே வழியா? #ParentingTips

ஆம். குழந்தைகளை அடிப்பதை நியாயப்படுத்த இதுபோல நிறைய பழமொழிகளும் சொலவடைகளும் இருக்கின்றன. அதையெல்லாம் சொல்லி அடிப்பது சரி என்று நிருவி விட முடியுமா?

முடியாது என்பதே சரியான பதிலாக இருக்கும்.

குழந்தைகளும் அடம்பிடிப்பதும் சேர்ந்தே பிறந்தது. அதனால் அது வேண்டும்,; இது வேண்டும் என அடம்பிடிப்பது குழந்தைகளின் இயல்புகளில் ஒன்று.

ஆனால், அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்களிடமிருந்து அதிகம் கிடைப்பது அடிகள்தான். ஆம். கோபத்தில் ஆவேசமாகக் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்கள் பலரை நாம் அக்கம் பக்கத்தில் பார்த்திருப்போம்.

அடம் பிடிக்கும் குழந்தையை அடிப்பது மட்டும்தான் ஒரே வழியா? #ParentingTips

அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க அடிப்பது ஒன்றுதான் தீர்வா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு முன் ஒரு குழந்தையை அடிப்பதால் என்னவாகும் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

அடி வாங்கிய குழந்தை மனதளவில் பதற்றம் அடைவார்கள். அதீத பயம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். அடிப்பவர்களை வெறுக்கவும் செய்கிறார்கள்.

இவை எல்லாம் அடிப்படையானவை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு அளிக்கப்படும் தண்டனையை ஒவ்வொரு விதமாக எதிர்கொள்ளும்.

அடம் பிடிக்கும் குழந்தையை அடிப்பது மட்டும்தான் ஒரே வழியா? #ParentingTips

ஆக, அடிப்பது என்பது அந்த நேரத்தில் குழந்தையை அமைதியாக்க முடியுமே தவிர மேற்கூரிய அத்தனை விஷயங்களை எதிர்கொள்வதைத் தடுக்க முடியாது. அதற்கான விளைவுகள் மோசமாகவே இருக்கும்.

சரி, நம்மால் செய்ய முடியாத, வாங்கிக் கொடுக்கவே முடியாத விஷயத்தைக் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தையை என்னதான் செய்வது என்ற கேள்வி கேட்பது புரிகிறது.

சற்றே மாத்தி யோசித்துப் பாருங்கள். அரசாங்கம் பிக்பாஸ் வீடுபோல நாடு முழுவதும் கேமரா பொருத்திவிட்டது. குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்களுக்கு கடும் தண்டனை என அறிவித்துவிட்டது. என்ன செய்வீர்கள்?

அப்படி ஒரு சூழல் வந்தால் மாற்று வழியை யோசிப்பீர்கள் அல்லவா?

அதை இப்போதே யோசியுங்கள். ஆம். பல நேரங்களில் நெருக்கடிதான் நம்மை வேகமாக இயங்க வைக்கும். அதேபோல அரசு நெருக்கடியை அறிவித்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.

முதலில் அடம்பிடிக்கும் குழந்தையை அடிக்கப்போவதில்லை என்ற உறுதி கொள்ளுங்கள்.

அடுத்து, குழந்தை அடம்பிடிக்கும் விஷயத்தை நம்மால் ஏன் நிறைவேற்றிக்கொடுக்க முடியவில்லை என்று யோசியுங்கள்.

அடம் பிடிக்கும் குழந்தையை அடிப்பது மட்டும்தான் ஒரே வழியா? #ParentingTips

அதை நிறைவேற்றிக்கொடுக்கவே முடியாதா… அல்லது தற்போது முடியாதா…. என்பதையும் சிந்தியுங்கள். தற்போது முடியாது என்றால் எப்போது முடியும் என குழந்தையுடன் அதன் மொழியில் பேசுங்கள்.

எப்போதுமே முடியாத பொருளை அல்லது விஷயத்தை குழந்தைக் கேட்கிறது என்றால், அப்போதும் குழந்தையின் மொழியில் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இப்போது குழந்தைக் கேட்கும் பொருளுக்குப் பதில் வேறு ஆப்ஷன் கொடுங்கள். அது ஏற்றுக்கொள்ளும் வரை ஆப்ஷன்களை மாற்றிக்கொண்டே இருங்கள்.

கடைத்தெருவுக்குச் செல்லும்போது ஏன் செல்கிறோம்… என்ன வாங்கபோகிறோம்… எங்கு வாங்க போகிறோம் என்பதை குழந்தையிடம் உரையாடிவிட்டு கடைத்தெரு அழைத்துச் சென்றாலே அடம்பிடிப்பதில் பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.

உங்கள் குழந்தையிடம் பேசி புரிய வைக்க முடியாவிட்டால் வேறு யாரிடமும் உங்களால் பேசி புரிய வைக்க முடியாது. எனவே அடிப்பதை ஒதுக்கி விட்டு பேசுங்கள்… உரையாடுங்கள்… சண்டை போடுங்கள்… மகிழ்ச்சியாக இருங்கள்.