விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

 

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர்.

கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும் கடத்தப்படும் இத்தகைய குழந்தைகள், ரயில்வே பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1125 சிறுவர்கள் மற்றும் 174 சிறுமிகள் என 1299 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், இதில் பெங்களூரு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் 523 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் ஒரே இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவினர் அங்கு சென்றனர். அதிரடி சோதனையை அடுத்து அங்கு பணியாற்றிய 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.