சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது!  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainசினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது! 

Child Kidnap
Child Kidnap

சென்னையில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் குழந்தையை கடத்திய பெண்ணையும் கைது செய்தனர். 

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் ஜானே போஸ்லே- ரந்தோஷ் தம்பதி. இவர்களுக்கு ஜான் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த 12-ம்தேதி இவர்களின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக்கூறி தம்பதிகளை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு, குழந்தையை கடத்திச்சென்றார். 
இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மருத்துவமனை வளாக சிசிடிவி காட்சி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது  23 வயது இளம்பெண் குழந்தையை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து பூக்கடை காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். 

kidnap

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த பெண் செல்லும் வழி முழுவதும் 25 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  அதில் அந்த பெண், குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் வரை செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த பெண் நடந்து செல்லும் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரை சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அந்த பெண் கடத்தப்பட்ட குழந்தையுடன் மருத்துவமனைக்குள் செல்லும் காட்சிகள் கிடைத்தது. அதனை வைத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை மடக்கிப்பிடித்தனர். குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அந்த  இளம்பெண் யார்? பின்புலம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.