“பத்து கோடி கொடுக்கணும் ,இல்லேன்னா மகனை மறந்துடனும்..” -கடத்தப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த நிலை.

“பத்து கோடி கொடுக்கணும் ,இல்லேன்னா மகனை மறந்துடனும்..” -கடத்தப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த நிலை.

ஒரு எட்டு வயதான சிறுவனை கடத்தி 10 கோடி பிணைய தொகை கேட்ட கடத்தல் காரர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் .

“பத்து கோடி கொடுக்கணும் ,இல்லேன்னா மகனை மறந்துடனும்..” -கடத்தப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த நிலை.

கர்நாடக மாநிலம்  தட்சிணா கன்னடத்தில் உள்ள பெல்தங்கடி தாலுகாவில்  அனுபவ் என்ற எட்டு வயதான சிறுவன் வியாழக்கிழமை தனது இல்லத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான். அந்த சிறுவனின்  தாத்தா ஒரு தொழிலதிபர், அவரது தந்தை கடந்த காலங்களில் பிட்காயின்களை வைத்து வியாபாரம் செய்து வந்தார் .

அந்த சிறுவனை கடத்திய கடத்தல்காரர்கள்  ரூ .10 கோடியை மீட்கும் தொகையாக  கோரியுள்ளனர். அதற்கு முன்னதாக அந்த சிறுவனை கடத்திய கடத்தல் காரர்கள் அதிக கோடிகளை மீட்பு தொகையாய்  கோரிக்கை வைத்திருந்தார்கள் .ஆனால் பின்னர் அது 10 கோடியாக  குறைக்கப்பட்டது. அந்த கடத்தல் காரர்கள் மீட்பு தொகையை பிட்காயின்களாக கேட்டுள்ளார்கள் .இந்த கடத்தல்காரர்கள் வாட்ஸ்அப்  மூலம் அந்த சிறுவனின் குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர்..

அந்த சிறுவனை கடத்திய குற்றவாளிகளை கைது செய்ய தட்சிணா கன்னட போலீசார் நான்கு குழுக்களை அமைத்துள்ளனர். இந்த கடத்தல்காரர்கள் ஒரு காரில் வந்து அனுபவைக் கடத்திச் சென்றனர். தக்ஷினா கன்னடத்தில் கடத்தல்காரர்கள் பிட்காயின்களை மீட்பு தொகையாக  கோரிய முதல் வழக்கு இது. போலீஸ் விசாரணையில் அந்த கடத்தல் காரர்கள்  சிறுவனின் குடும்பத்தினருக்கு  நன்றாக அறிமுகமானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது .மேற்கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

“பத்து கோடி கொடுக்கணும் ,இல்லேன்னா மகனை மறந்துடனும்..” -கடத்தப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த நிலை.