குழந்தை கைவிரல் துண்டிப்பு : ரூ.75 ஆயிரம் தர நீதிமன்றம் உத்தரவு!

 

குழந்தை கைவிரல் துண்டிப்பு : ரூ.75 ஆயிரம் தர நீதிமன்றம் உத்தரவு!

விரல் துண்டிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.75,000 வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை கைவிரல் துண்டிப்பு : ரூ.75 ஆயிரம் தர நீதிமன்றம் உத்தரவு!

தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி காட்டூரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கணேசன்- பிரியதர்ஷினி தம்பதியின் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஒயரை அகற்றுவதற்கு பதில் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.தஞ்சையில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையின் கட்டை விரலை வெட்டிய அரசு செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையின் தந்தை கணேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

குழந்தை கைவிரல் துண்டிப்பு : ரூ.75 ஆயிரம் தர நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் தஞ்சையில் கட்டைவிரல் துண்டிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு தர மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தை கட்டைவிரலை பழையபடி சேர்க்கும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையின் கட்டைவிரலை செவிலியர் துண்டித்த வழக்கில் ஐகோர்ட் கிளை இவ்வாறு கூறியுள்ளது. வழக்கில் மருத்துவ அமைச்சர், தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் பதில் தர நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணையிட்டுள்ளார். குழந்தையின் தந்தை கணேசன் தொடர்ந்த வழக்கின் விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.