நீர் தேக்கத்தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

 

நீர் தேக்கத்தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

தமிழகத்தில் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொதிக்கும் சாம்பாரில் குழந்தைகள் விழுவது, தண்ணீர் தொட்டியில் விழுவது, பள்ளத்தில் விழுவது எனக் குழந்தைகளின் மரணம் தொடர்கதையாகி விட்டது, இந்த நிலையில் சென்னையில் மேலும் ஒரு சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

நீர் தேக்கத்தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

சென்னை குரோம்பேட்டை அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரின் மகன் சந்தோஷ் குமார் (6) . கூலி வேலை செய்து வரும் செல்வராஜின், வீட்டின் அருகே லட்சுமணன் என்பவர் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். அந்த வீட்டின் முன்பு சிறுவன் சந்தோஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இருந்த 14 அடி ஆழமுள்ள நீர்த்தேக்க தொட்டியில், சிறுவன் தவறி விழுந்துள்ளார். அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவன் விழுந்து விட்டதாகச் சத்தம் போட்டுள்ளார்.

அதற்குள் சிறுவன் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கி இருக்கிறார். அதன் பின்னர், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.