• April
    06
    Monday

Main Area

Main



காதலிக்காக மனைவியை கொலை செய்த மருத்துவர் : பயத்தில் ரயில் முன் பாய்ந்தார்; கள்ளகாதலி தூக்கில் தொங்கினார்!

சிக்கமகளூரு
சிக்கமகளூரு

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் லட்சுமேஸ்வரா பகுதியை சேர்ந்த  பல் மருத்துவர் ரேவந்த். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகன், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதா கார் நிறுத்தும் இடத்தில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அதே சமயம் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் கடூர் டவுன் போலீசார் மர்ம நபர்கள் கவிதாவை கொலைசெய்து விட்டு கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று எண்ணினர். அதே சமயம் கவிதாவின் பெற்றோர் கணவர் ரேவந்த் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்த நிலையில் அவரிடமும் விசாரணை நடந்து வந்தது. 

ttn

இதையடுத்து வெளியான  கவிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கவிதாவின் வயிற்றில் மயக்க மருந்து செலுத்திருப்பது தெரியவந்தது. ரேவந்த் மருத்துவர் என்பதால்  அவர் தான் மயக்கமருந்து கொண்டு கவிதாவை கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் உறுதிசெய்தனர்.  இதுகுறித்து நடத்திய விசாரணையில், ரேவந்த்தும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்த பேஷன் டிசைனரான ஹர்சிதா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் ஆனால் ரேவந்த், கவிதாவையும், ஹர்சிதா பெங்களூருவில் பி.எம்.டி.சி பஸ் டிரைவராக இருக்கும் சுதீந்திராவையும் திருமணம் செய்து கொண்டனர்.  ஹர்சிதாவுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரேவந்த் மற்றும் ஹர்சிதா பழகி வந்துள்ளனர். இதனால் ரேவந்த் ஹர்சிதாவை பார்க்க அடிக்கடி பெங்களூரு சென்று வந்துள்ளார். இதையறிந்த கவிதா ரேவந்த்தை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் ஹர்சிதாவுடன் இருக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. 

ttn

சம்பவத்தன்று கவிதாவை நகைக்கடைக்கு அழைத்து சென்ற ரேவந்த் அவருக்கு நகை வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் கவிதா ஹர்சிதாவுடன் உள்ள பழக்கத்தை விட்டுவிடும் படி கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ரேவந்த் மயக்கஊசி போட்டதுடன் அவர் மயங்கியதுடன் கத்தியால் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு, குழந்தைகளை அழைத்து கொண்டு, வீட்டிலிருந்த நகைகளையும் எடுத்துகொண்டு கிளினிக்கிற்கு சென்றுள்ளார் என்பது  போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

இதுகுறித்து தகவலறிந்து தலைமறைவான ரேவந்த்  நேற்று முன்தினம் மாலை   பண்டிகொப்பலு என்ற கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடைத்தார்.  இதையடுத்து  உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், மனைவியின் கொலையில் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்று பயந்து  பெங்களூரு நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதே போல் ரேவந்த் தற்கொலை செய்து கொண்டதை  அறிந்த கள்ளக்காதலி ஹர்சிதா  நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின்  கள்ளக்காதலால் ஒன்றும் அறியாத குழந்தைகள் தற்போது நிர்க்கதியாக நிற்கின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.