அஸ்வினை மனதுக்கு மேல் ஏற்றுக்கொண்ட கோலி… நடராஜனை செலக்ட் செய்யாததற்கு காரணம் இதுதான்?

 

அஸ்வினை மனதுக்கு மேல் ஏற்றுக்கொண்ட கோலி… நடராஜனை செலக்ட் செய்யாததற்கு காரணம் இதுதான்?

ஐபிஎல் திருவிழா முடிந்த அடுத்த இரு நாட்களில் உலகக்கோப்பை டி20 திருவிழா தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு அந்த நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ அறிவித்தது. அணி தேர்வு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே அமைந்துள்ளது. இரண்டு சர்ப்ரைஸ்கள் ஒரு ஏமாற்றம் என அணி தேர்வு இருக்கிறது.

அஸ்வினை மனதுக்கு மேல் ஏற்றுக்கொண்ட கோலி… நடராஜனை செலக்ட் செய்யாததற்கு காரணம் இதுதான்?

சர்ப்ரைஸ்களில் ஒன்று நான்காண்டுகளுக்குப் பிறகு வொயிட் பால் கிரிக்கெட்டில் அஸ்வினை தேர்வு செய்திருப்பது. மற்றொன்று மிக மிக முக்கியமானது. இந்த அணியின் ஆலோசகராக கேப்டன் கோலியின் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறது பிசிசிஐ. அந்த ஒரு ஏமாற்றம் தமிழக வீரர் நடராஜன் இல்லாதது. தமிழக வீரர்களான அஸ்வின், வருண் சக்ரவர்த்தி அணியில் இடம்பெற்றிருந்தாலும் நடராஜன் இல்லாமல் இருப்பது ஒரு குறையாக உள்ளது.

அஸ்வினை மனதுக்கு மேல் ஏற்றுக்கொண்ட கோலி… நடராஜனை செலக்ட் செய்யாததற்கு காரணம் இதுதான்?

இவற்றுக்கெல்லாம் அணியின் தேர்வாளர்களில் ஒருவரான சேத்தன் சர்மா விளக்கமளித்துள்ளார். அணி தேர்வு தொடர்பாக அவர் பேசுகையில், “அஸ்வின் ஒவ்வொரு ஆண்டும் ரெகுலராக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அஸ்வின் போன்ற பெஷலிஸ்ட்கள் நமக்கு தேவை. அதைவிட ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மைதானங்கள் ஸ்லோ ஃபிட்ச் வகையறாக்கள். அதுபோன்ற சூழலில் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசுவார். அவருக்கு அனுபவம் இருக்கிறது. இதையெல்லாம் விட அஸ்வின் இந்தியாவின் சொத்து.

அஸ்வினை மனதுக்கு மேல் ஏற்றுக்கொண்ட கோலி… நடராஜனை செலக்ட் செய்யாததற்கு காரணம் இதுதான்?
சேத்தன் சர்மா

அஸ்வின் தேவை என்பதை இத்தனை ஆண்டுகளாக கேப்டன் கோலி நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அணியில் உள்ள மற்ற முக்கிய வீரர்கள் அஸ்வின் அணிக்குத் தேவை என்பதை உறுதியாக நம்புகிறார்கள். அஸ்வினை அணியில் சேர்த்தது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆகவே தான் கேப்டன் கோலியால் அதனை மறுக்க முடியவில்லை” என்றார். இது ஏற்கெனவே இருந்த பிரச்சினைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது. ஏனெனில் அஸ்வின் ப்ரைம் ஃபார்மில் இருந்தாலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை கோலி அணியில் எடுக்கவில்லை. இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் கோலியை வறுத்தெடுத்து வந்தனர்.

அஸ்வினை மனதுக்கு மேல் ஏற்றுக்கொண்ட கோலி… நடராஜனை செலக்ட் செய்யாததற்கு காரணம் இதுதான்?

அதேபோல இடதுகை யார்க்கர் பந்துவீச்சாளரான நடராஜனை தேர்ந்தெடுக்காதது குறித்துப் பேசிய சேத்தன் சர்மா, “அணி தேர்வின்போது நடராஜன் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. அவரும் நீண்ட நாட்கள் கிரிக்கெட் எதிலும் பங்கேற்கவில்லை. மேலும் காயமடைந்த வீரர்கள் பட்டியலில் இருக்கிறார். இடதுகை பந்துவீச்சாளர் தேவைப்பட்ட போதிலும் அவரை தேர்வு செய்ய முடியவில்லை. இன்னொரு காரணம் மெதுவான ஃபிட்ச். அதனால் தான் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஹர்திக் பாண்டியாவை ஒரு ஆல்ரவுண்ட் ஆப்ஷனாக எடுத்தோம்” என்றார். உண்மையில் காயம் தான் நடராஜனின் வாய்ப்பைப் பறித்ததா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் பிசிசிஐயின் டிசைன்களும் டிராக் ரெக்கார்டுகளும் அப்படி.