கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 2,718 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதியானதில் மொத்த பாதிப்பு 2,496 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

இதன் காரணமாக தலைமை செயலர் சண்முகம் இன்று 15 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொளி காட்சி மூலம் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.