‘மூன்று பேருக்கு கொரோனா உறுதியானால்’.. தலைமை செயலாளர் எடுத்த முக்கிய முடிவு!

‘மூன்று பேருக்கு கொரோனா உறுதியானால்’.. தலைமை செயலாளர் எடுத்த முக்கிய முடிவு!

இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உட்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததோடு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

‘மூன்று பேருக்கு கொரோனா உறுதியானால்’.. தலைமை செயலாளர் எடுத்த முக்கிய முடிவு!

ஆங்காங்கே பிரச்சார கூட்டங்கள், கட்சி மீட்டிங் என மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. சமூக இடைவெளி என்ற ஒன்றை மக்கள் மறந்தே போய்விட்டார்கள். இது கொரோனா பாதிப்பு மீண்டும் பன்மடங்கு அதிகரிக்கும் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, வதந்திகளை நம்ப வேண்டாமென தெரிவித்திருக்கிறது.

‘மூன்று பேருக்கு கொரோனா உறுதியானால்’.. தலைமை செயலாளர் எடுத்த முக்கிய முடிவு!

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா உறுதியானால் அதை நோய்க் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அங்கு செல்பவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி போடுதலை அதிகரித்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.