மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை!

 

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ஜூலை 31-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை!

மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து, சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றுக்கு தடை தொடரும் என்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று இயங்கலாம், தொழில் பயிற்சி நிறுவனங்கள் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் அறிவித்தார். இவை வரும் 19ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய நிலவரத்தின் படி பெரும்பாலான சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கிவிட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் அதே வேளையில் மூன்றாம் அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் அலை தீவிரமாக இருந்த தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, மூன்றாவது அலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் , 3வது அலை குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.