கொரோனா காரணமாக அண்ணா படத்துக்கு மாலை போடவில்லை! – துரைமுருகனுக்கு முதல்வர் பதில்

கொரோனா காரணமாக அண்ணா படத்துக்கு மாலை போடவில்லை! – துரைமுருகனுக்கு முதல்வர் பதில்

தற்காலிக சட்டப்பேரவை செயல்படும் கலைவாணர் அரங்கில் உள்ள அண்ணா படத்துக்கு கொரோனா காரணமாக மாலை அணிவிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையின் மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நீட், கொரோனா பற்றி பரபரப்பான விவாதங்கள் நடந்தன. தி.மு.க-வுக்கு சூடான பதிலடி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டப் பேரவைக்குள்

கொரோனா காரணமாக அண்ணா படத்துக்கு மாலை போடவில்லை! – துரைமுருகனுக்கு முதல்வர் பதில்

வைக்கப்பட்டுள்ள அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்காதது பற்றி தி.மு.க தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசும் போது, “அண்ணா பிறந்தநாளை நினைவுபடுத்தி பேசும் போது மகிழச்சியாக உள்ளது. அவரின் படத்தைப் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. பிறந்த நாள் அன்றாவது

கொரோனா காரணமாக அண்ணா படத்துக்கு மாலை போடவில்லை! – துரைமுருகனுக்கு முதல்வர் பதில்

அவரின் படத்திற்கு மாலை அணிவித்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும்” என்றார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா தொற்று காரணமாகவே அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்கவில்லை” என்றார்.
முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.