“சட்டம் தன் கடமையை செய்யும்” : பாஜக வேல் யாத்திரை குறித்து முதல்வர் பதில்!

“சட்டம் தன் கடமையை செய்யும்” : பாஜக வேல் யாத்திரை குறித்து முதல்வர் பதில்!

தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தியது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

“சட்டம் தன் கடமையை செய்யும்” : பாஜக வேல் யாத்திரை குறித்து முதல்வர் பதில்!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் இன்று நடத்தப்பட இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திட்டமிட்டபடி யாத்திரையை தொடங்கினார். அவருக்கு வழிநெடுக்கிலும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் திருத்தணிக்கு சென்று முருகனை வழிபடவே செல்கிறேன் என்று கூறி சென்றார் முருகன்.

“சட்டம் தன் கடமையை செய்யும்” : பாஜக வேல் யாத்திரை குறித்து முதல்வர் பதில்!

மற்றொருபுறமோ யாத்திரைக்கு அனுமதி அளிக்காத தமிழக அரசை கண்டித்தும், போலீசை கண்டித்தும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் பாஜகவினர் ஈடுபட்டு வந்தனர்.

“சட்டம் தன் கடமையை செய்யும்” : பாஜக வேல் யாத்திரை குறித்து முதல்வர் பதில்!

இந்நிலையில் நீலகிரியில் இன்று தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமியிடம் தடையை மீறி பாஜகவின் வேல் யாத்திரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி சட்டம் தனது கடமையை செய்யும் என்று உறுதிபட தெரிவித்தார்.

இதனிடையே திருத்தணி கோயிலுக்கு வேலுடன் சென்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.