முதல்வர் தாயார் மறைவு : நடிகை குஷ்பு, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்!

 

முதல்வர் தாயார் மறைவு : நடிகை குஷ்பு, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்!

முதல்வரை சந்தித்து தாயாரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நடிகை குஷ்பு , எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்ட தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு நடிகை குஷ்பு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் தாயார் மறைவு : நடிகை குஷ்பு, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்!

அதேபோல் தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் நேரில் வருகை தந்து தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

முதல்வர் தாயார் மறைவு : நடிகை குஷ்பு, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்!

மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

முதல்வர் தாயார் மறைவு : நடிகை குஷ்பு, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்!

முன்னதாக நேற்றைய தினம் திமுக எதிர்க்கட்சிதலைவர் மு.க. ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ் மற்றும் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகைகள் ஆகியோர் நேரில் வந்து ஆறுதல் கூறி மரியாதை செலுத்தினர்.