கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்குமாறு முதல்வர் கடிதம்!

 

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்குமாறு முதல்வர் கடிதம்!

தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். இதன் காரணமாக, அப்பகுதிகளில் தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகிறது. அந்த தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டு இருக்கின்றன. தமிழ் பள்ளிகளை மூடக்கூடாது என அப்பகுதிவாழ் தமிழ் மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மூடப்பட்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்குமாறு முதல்வர் கடிதம்!

அந்த கடிதத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக இருக்கும் தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் புதிய பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.