“பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனா படிப்படியாக குறையும்” : சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

“பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனா படிப்படியாக குறையும்” : சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனா படிப்படியாக குறையும்” : சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

அதே சமயம் கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.

“பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனா படிப்படியாக குறையும்” : சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு!

அந்த வகையில் இன்று சேலத்தில் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள், மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ” பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலத்திலும் நலத்திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன.100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைய, குறைய தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.