தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்? குஜராத்தில் ஆலோசனை செய்யும் ஆர்.எஸ்.எஸ், பாஜக!

 

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்? குஜராத்தில் ஆலோசனை செய்யும் ஆர்.எஸ்.எஸ், பாஜக!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதனால் திமுக, அதிமுக இருதரப்பும் தங்கள் கூட்டணிக்கட்சிகளை இறுதிப்படுத்திக்கொள்ள மும்முரமாக இருக்கின்றன. அதற்கு முன்பே இரு கட்சிகளும் பிரசாரத்தில் களை கட்டத் தொடங்கி விட்டன.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரிய மோதல் இல்லை. ஆனால், அதிமுகவின் கூட்டணிக்குள் சமீபமாக சில சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. அக்டோபர் முதல்வாரத்தில் சில சமரசங்கள் நடைபெற்று, எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளர் என பன்னீர்செல்வமே அறிவித்தார். அதனால், கட்சியின் மிகப் பெரிய சிக்கல் தீர்ந்தது என நினைத்தார்கள். ஆனால், சிக்கலே அதிலிருந்து தற்போது தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்? குஜராத்தில் ஆலோசனை செய்யும் ஆர்.எஸ்.எஸ், பாஜக!

முதல் எதிர்ப்புக்குரல் பாஜகவிடமிருந்து வந்தது. அக்கட்சியின் தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளார் மட்டுமே எடப்பாடி. கூட்டணியின் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என்று தெரிவித்தனர்.

இதேபோல பாமகவின் மூத்த தலைவர் ஜி.கே. மணி, ‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை ராமதாஸ் அறிவிப்பார்’ என்று தெரிவித்திருக்கிறார். இதனால் சிக்கல் இன்னும் அதிகமானது.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியோ, ‘தேர்தல் முடிந்துதான் முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்ய முடியும்’ என்று தெரிவித்தார். இதனால், இந்தச் சிக்கல் இப்போதைக்கு முடியாது என்ற நிலை வந்துவிட்டது. இன்றோ, பாஜகவின் குஷ்பு, ‘இன்னும் ஐந்து நாட்களில் முதல்வர் வேட்பாளர் யாரென்று பாஜக அறிவிக்கும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்? குஜராத்தில் ஆலோசனை செய்யும் ஆர்.எஸ்.எஸ், பாஜக!

குஷ்பு திடீரென்று ஐந்து நாட்கள் எனச் சொல்வது எப்படி என ஆராய்ந்தபோது இன்னொரு செய்தியையும் அத்தோடு இணைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. குஜராத் மாநிலம் அகமாதாபாத் நகரில் வரும் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை முக்கியக் கூட்டம் ஒன்று நடக்க விருக்கிறது. அதில் பாஜக தலைவர் நட்டா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்துகொள்ள விருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவெடுக்கும் விஷயம் நடக்கப்போவதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆர்.எஸ்.எஸ் வகுத்துக்கொடுக்கும் என்று தெரிகிறது.