ரூ.20 கோடி தங்கம் கொள்ளை… புலனாய்வில் அசத்திய ‘தமிழர்’ ஐபிஎஸ் அதிகாரி – ரூ.2 லட்சம் பரிசளித்த யோகி!

ரூ.20 கோடி தங்கம் கொள்ளை… புலனாய்வில் அசத்திய ‘தமிழர்’ ஐபிஎஸ் அதிகாரி – ரூ.2 லட்சம் பரிசளித்த யோகி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தைக் கண்டுபிடித்து, கொள்ளையர்களைக் கைதுசெய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிசு வழங்கியுள்ளார். மிகவும் சவாலான இந்த வழக்கை முடித்ததால் அந்த அதிகாரிக்கு பரிசு கொடுத்து சிறப்பித்திருக்கிறார் யோகி.

ரூ.20 கோடி தங்கம் கொள்ளை… புலனாய்வில் அசத்திய ‘தமிழர்’ ஐபிஎஸ் அதிகாரி – ரூ.2 லட்சம் பரிசளித்த யோகி!

நொய்டாவில் சலார்பூரில் இரண்டு பேரைச் சந்தேகித்த போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரித்தபோது அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளனர். சினிமாவில் சந்தேகத்தின் பேரில் பிடிபடுவர்களை நோண்டினால் மிகப்பெரிய குற்றம் வெளிவரும். அதே பாணியில் தான் அவர்களை நோங்கி நொங்கெடுத்ததில் உண்மையைக் கக்கியுள்ளனர். அவர்களைச் சோதனை செய்ததில் இருவரிடம் தலா 1 கிலோ பெறும் தங்க கட்டிகளை வைத்திருந்துள்ளனர். இது எப்படி கிடைத்தது என்று விசாரணை செய்திருக்கின்றனர் போலீசார்.

ரூ.20 கோடி தங்கம் கொள்ளை… புலனாய்வில் அசத்திய ‘தமிழர்’ ஐபிஎஸ் அதிகாரி – ரூ.2 லட்சம் பரிசளித்த யோகி!

அப்போது அவர்கள் தாங்களும் தங்களுடைய நண்பர்கள் 8 பேரும் சேர்ந்து நொய்டா மாநகராட்சிக்குட்பட்ட சூரஜ்பூரிலுள்ள விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு பிளாட்டில் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகக் கூறியுள்ளனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளையும் 10 கோடி ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவற்றை பங்கு போட்டுக் கொண்டு சொத்துக்களை வாங்கியும், விலை உயர்ந்த வாகனங்களில் வலம் வந்தும், ஸ்டார் ஹோட்டலில் தங்கியும் ஏகபோகமாக வாழ்ந்துள்ளனர்.

ரூ.20 கோடி தங்கம் கொள்ளை… புலனாய்வில் அசத்திய ‘தமிழர்’ ஐபிஎஸ் அதிகாரி – ரூ.2 லட்சம் பரிசளித்த யோகி!

அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சையடைந்த சலார்பூர் காவல் துறையினர், இதுதொடர்பாக சூரஜ்பூர் காவல் நிலையத்தில் ஏதேனும் வழக்கு பதிவாகியிருக்கிறதா என்று கேட்டுள்ளார்கள். மிகப்பெரிய கொள்ளைச் சம்பவமான இதுகுறித்து அப்படி ஒரு வழக்கே பதிவாகவில்லை என்று சொல்லியுள்ளார்கள். இது மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்தேகம் வலுக்கவே அந்த வீட்டில் சோதனை போட்டுள்ளார்கள். விசாரணை செய்ததில் அது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிஸ்லே பாண்டேவின் வீடு என்றும், சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததால் இதுதொடர்பாகப் புகார் கொடுக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

ரூ.20 கோடி தங்கம் கொள்ளை… புலனாய்வில் அசத்திய ‘தமிழர்’ ஐபிஎஸ் அதிகாரி – ரூ.2 லட்சம் பரிசளித்த யோகி!

இவ்விவகாரம் தொடர்பாக கிஸ்லே பாண்டேவிடம் கேட்டதற்கு தனக்கு அப்படி எதுவுமே தெரியாது என கூறி ஷாக் கொடுத்துள்ளார். இதனிடையே சலார்பூரை சேர்ந்த ராஜன் பாட்டி, அருண் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளது. எஞ்சிய நான்கு பேரைத் தேடி வருகின்றனர். இவர்கள் தங்கியிருந்த இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகள், 3 கிலோ தங்க நகைகள் ரூ.57 லட்சம் பணம், ரூ.1 கோடி நிலப்பத்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு கிஸ்லே பாண்டேவின் உதவியாளர் தான் துணைபுரிந்திருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

ரூ.20 கோடி தங்கம் கொள்ளை… புலனாய்வில் அசத்திய ‘தமிழர்’ ஐபிஎஸ் அதிகாரி – ரூ.2 லட்சம் பரிசளித்த யோகி!

இந்தச் சம்பவத்தைக் கண்டுபிடிப்பதற்காக நொய்டா காவல் துணை ஆணையரான சு.ராஜேஷ் தான் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். இவர் தமிழ்நாட்டில் கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழர். ஐபிஎஸ் அதிகாரியாக நொய்டாவில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை புலனாய்வு செய்த சு.ராஜேஷை பாராட்டி அவரது குழுவிற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 லட்சம் ரூபாய் பரிசை அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், நொய்டா காவல்துறை ஆணையரும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அளித்துள்ளார்.