வயிற்றில் அடிக்கும் முதல்வர் – வன்மையாக கண்டிக்கும் பாஜக

 

வயிற்றில் அடிக்கும் முதல்வர் – வன்மையாக கண்டிக்கும் பாஜக

வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொண்ட தி மு க அரசு குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை கைவிட்டு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து விவசாயிகளின் உரிமைகளை தட்டி பறித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

வயிற்றில் அடிக்கும் முதல்வர் – வன்மையாக கண்டிக்கும் பாஜக

அவர் மேலும், பல லட்சக்கணக்கான விவசாயிகள் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை அலட்சியப்படுத்தும் இச்செயலை விவசாய விரோத தி மு க அரசு திருத்தி கொள்ள வேண்டும். உடன் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கிறார்.

நெல்லுக்கு காப்பீடு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் நெல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக நெல்லுக்கான காப்பீட்டு அறிவிக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசின் முடிவு விவசாயிகளை மீண்டும் தற்கொலைக்கு கொண்டு செல்லும் செயலாகும் என்றும் முதல்வரை எச்சரித்துள்ளனர்.