தமிழக முதல்வர் அறிவித்துள்ள சுற்றுப்பயணம் இந்த மூன்று காரணங்களுக்காகத்தான்!

 

தமிழக முதல்வர் அறிவித்துள்ள சுற்றுப்பயணம் இந்த மூன்று காரணங்களுக்காகத்தான்!

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் அறிவித்துள்ள சுற்றுப்பயணம் இந்த மூன்று காரணங்களுக்காகத்தான்!

கொரொனா நோய்த் தொற்றல் உலகம் முழுவதுமே அச்சத்தை அளித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் தினந்தோறும் கோரோனா நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று (ஜூன் 25) 3509 புதிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், சென்னையில் மட்டும் 1834 பேர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு கவலையைக் கொடுத்தாலும் இன்று மட்டும் 2236 பேர் குணமாகி வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள் எனும் தகவல் ஆறுதலைத் தருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்க, ஆளுங்கட்சிதான் காரணம் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக அரசின் சார்பாக அவற்றிற்குப் பதில்கள் அளிக்கப்படுகின்றன. இதன் அடுத்தக் கட்டமாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்ய விருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் நோக்கமாக மூன்று விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று, அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் எந்தளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்தும் கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.