ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

 

ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

தமிழக முதல்வராக கடந்த மாதம் 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அன்று முதல் பல திட்டங்களை அவர் அமல்படுத்தி வருகிறார் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், 14 மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசம் என பல அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான 2000 ரூபாய் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் ரேஷன் கடைகளில் மக்கள் பெற்று வருகின்றனர்.

ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் இயங்கி வரும் நியாயவிலை கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் கொரோனா நிவாரண தொகை, 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களின் தொகுப்பு உள்ளிட்டவை சரியாக வழங்கப்படுகிறதா? என்று ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.