காவிரி மேலாண்மை வாரிய போராட்டம்: வழக்கிலிருந்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் விடுவிப்பு!

 

காவிரி மேலாண்மை வாரிய போராட்டம்: வழக்கிலிருந்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் விடுவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நடத்தின. சென்னை அண்ணா சாலையில் அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.

காவிரி மேலாண்மை வாரிய போராட்டம்: வழக்கிலிருந்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் விடுவிப்பு!

அனுமதியின்றி நடைபெற்ற இப்போராட்டம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது.

காவிரி மேலாண்மை வாரிய போராட்டம்: வழக்கிலிருந்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் விடுவிப்பு!

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசு உத்தரவு பிறப்பித்தை சுட்டிக்காட்டி அந்த அரசு உத்தரவு நகலை சமர்ப்பித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.