ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது தந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

 

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது தந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் மாவட்டமாக திகழ்கிறது நீலகிரி.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது தந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

கொரோனாவிலிருந்து இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நன்கு படித்து, வேலையில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கி வரும் நிலையில், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டு வருகிறது. இந்த சூழலில் தகுதி வாய்ந்த பழங்குடிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது நீலகிரி.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது தந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 21 ஆயிரத்து 800 பழங்குடிகள் நேற்று மாலையுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முதலில் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரம்ப சுகாதார நிலையங்கள் , களப்பணியாளர்கள் , அரசு சாரா அமைப்புகள் சுகாதாரத்துறை என பலரும் இரவு பகல் பாராமல் உழைத்து அதன் விளைவாகவே நீலகிரியில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பழங்குடிகள் அச்சப்பட்ட நிலையில் அவர்களிடம் முதலில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை விளக்கியுள்ளது அம்மாவட்ட நிர்வாகம். அவர்கள் மொழியில் பேசும் நபர்களின் உதவியுடன் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய சுகாதாரத்துறை இந்தப் பெரும் முயற்சிக்க வித்திட்டுள்ளது.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது தந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டினார். உதகையில் பழங்குடியின மக்கள் 21 ஆயிரத்து 800 பேருக்கும் 100 சதவீத தடுப்பூசி செலுத்தியதற்காக நீலகிரி ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.