கருணாநிதியின் 98வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

 

கருணாநிதியின்  98வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின்  98வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 98வது பிறந்தநாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி 38 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தையும் மெரினாவில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின். 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. 36 பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின்  98வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

இதனிடையே கருணாநிதியின் 98வது பிறந்தநாளை ஒட்டி “போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்” என சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.