டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக இன்று டெல்லியில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். இதற்காக காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

இன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ள மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து ,தடுப்பூசி தேவை, செங்கல்பட்டில் கோவில் தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். விமான நிலையத்திலிருந்து காரில் தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற அவர் , அங்கிருந்து டெல்லியின் மின்டோ சாலையில் கட்டப்பட்டுவரும் திமுக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார். மூத்த தலைவர்கள் துரை முருகன், டி ஆர் பாலு கனிமொழி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். திமுக அலுவலகம் விரைவில் கட்டப்பட்டு ஜூலை மாதம் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.