முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.. ராமதாசுக்கு மட்டும்.. குத்திக்காட்டும் சுப.வீ.

 

முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.. ராமதாசுக்கு மட்டும்.. குத்திக்காட்டும் சுப.வீ.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு பெரிய பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்புக்கிறார் தமிழ்நாடு பாடநூல் கழக அறிவுரைக்குழு உறுப்பினர் சுப.வீரபாண்டியன்.

முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.. ராமதாசுக்கு மட்டும்.. குத்திக்காட்டும் சுப.வீ.

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது பல்லாண்டு கால கனவு. அந்த கனவுக்கு உயிர் கொடுப்பதற்கான போராட்டங்களை 41 ஆண்டுகளுக்கு முன் ராமதாஸ் தொடங்கினார். சிதறிக்கிடந்த அமைப்புகளை ஒன்றுபடுத்தி வன்னியர் சங்கத்தை கட்டமைத்த அவர்தான் வன்னியர்களின் சமூக கல்வி பொருளாதார நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்ற உண்மையை புள்ளிவிவரங்களுடன் இந்த உலகத்திற்கு எடுத்து வைத்தார். அதன் பிறகுதான் வன்னியர்களின் வாழ்க்கை நிலை குறித்தும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சமூகநீதிக்கு ஆதரவானவர்கள் புரிந்துகொண்டனர் என்று சொல்லும் பாமக தலைவர் ஜி.கே.மணி,

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டம் 2021 நடைமுறைக்கு வந்திருக்கிறது. வன்னிய மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த விருப்பம் இந்த சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்த ராமதாஸ் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட இந்தக் கோரிக்கைக்காக குரல் கொடுத்து வந்த அனைத்து அமைப்புகளின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.. ராமதாசுக்கு மட்டும்.. குத்திக்காட்டும் சுப.வீ.

ஒற்றை வரியில் கூறவேண்டுமானால் ராமதாஸ் இல்லை என்றால் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு இல்லை. இட ஒதுக்கீட்டுக்கான எல்லாப்புகழும் ராமதாஸ் அவர்களையே சாரும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்த ராமதாஸ் அவர்களை பாட்டாளி மக்கள் கடந்த இரு நாட்களாக போற்றிக் கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

ராமதாசுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். கொரோனா ஊரடங்கு சூழலில் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் பாட்டாளி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் , சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து ராமதாசுக்கு இணைய வழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்து உள்ளனர். வரும் 31. 7 .2021 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பாராட்டு விழா நடைபெறும் என்பதை 3 அமைப்புகளின் சார்பில் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார். பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் இந்த பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.. ராமதாசுக்கு மட்டும்.. குத்திக்காட்டும் சுப.வீ.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ். மேலும், வன்னியர்களின் கல்வி – வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசியிலும் நன்றி தெரிவித்துள்ளார் ராமதாஸ். ஆனாலும், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவில்லை என்று குத்திக்காட்டியிருக்கிறார் சுப.வீ.

முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.. ராமதாசுக்கு மட்டும்.. குத்திக்காட்டும் சுப.வீ.

ஆனாலும், ‘’உள்ஒதுக்கீடு பெற்றுத் தந்த மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு, வரும் 31 ஆம் தேதி மிகப் பெரிய பாராட்டு விழாவாம்! நல்லது, மகிழ்ச்சி. இட ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு வேண்டாமா? அதுதானே நாகரிகமும், நாணயமும் ஆகும்!’’என்று குத்திக்காட்டுகிறார் சுப.வீரபாண்டியன்.