விமானத்தில் முதல் முறையாக தமிழில் அறிவிப்பு செய்த சேலம் விமானிக்கு முதலமைச்சர் பாராட்டு

 

விமானத்தில் முதல் முறையாக தமிழில் அறிவிப்பு செய்த சேலம் விமானிக்கு முதலமைச்சர் பாராட்டு

பரப்புரைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். சேலம் விமான நிலையத்திலிருந்து தனியார் ட்ரூ ஜெட் விமானம் மூலம் அவர் சென்னைக்கு பயணம் செய்தார். இதனையறிந்த அந்த விமானத்தின் விமானி கோபிநாத், தனது மனைவியின் பிரசவ நாள் என்றும் பாராமல் விமானத்தை சென்னையிலிருந்து இயக்கிவந்து, சேலத்தில் முதலமைச்சரை அழைத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். சேலத்தில் முதலமைச்சர் விமானத்தில் ஏறியவுடன், எப்போதும் இல்லாமல் முதல் முறையாக தமிழில் அறிவிப்பு செய்தார் கோபிநாத். இது முதலமைச்சர் பழனிசாமியை வெகுவாக கவர்ந்தது.

விமானத்தில் முதல் முறையாக தமிழில் அறிவிப்பு செய்த சேலம் விமானிக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை வந்தவுடன் விமானத்தில் முதல் முறையாகத் தமிழில் அறிவிப்பு செய்த விமானி கோபிநாத்தை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுக்களை தெரிவித்தார். அப்போது விமானிக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் கோபிநாத்துக்கும், அவரது குடும்பத்திற்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சேலம் மாவட்டம் பேளூர் அடுத்த குறிச்சியைச் சேர்ந்த சீனிவாசன்- மகேஸ்வரி தம்பதியினரின் மகன் தான் கோபிநாத். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் விமானி பயிற்சி பள்ளியிலும், 2012 ஆம் ஆண்டு சேலம் விமான பயிற்சி பள்ளியிலும் பணியாற்றியுள்ளார்.