உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் – ஆந்திர முதல்வருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்  – ஆந்திர முதல்வருக்கு  முதல்வர் பழனிசாமி கடிதம்!

உளுந்தூர் பேட்டையில் அமைய உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்குமாறு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்  – ஆந்திர முதல்வருக்கு  முதல்வர் பழனிசாமி கடிதம்!

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோயில் கட்ட 4 ஏக்கர் நிலத்தினை கடந்த ஆண்டு வழங்கினார். இதற்கான ஆவணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தேவஸ்தான அதிகாரிகளிடம் முதல்வர் பழனிசாமி ஒப்படைத்தார்.

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்  – ஆந்திர முதல்வருக்கு  முதல்வர் பழனிசாமி கடிதம்!

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் ஏழுமலையான் கோயில் கட்ட தேவையான நிர்வாக அனுமதியை வழங்குமாறு தமிழக முதல்வர் பழனிசாமி ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலயில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுமானத்திற்காக 4 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்  – ஆந்திர முதல்வருக்கு  முதல்வர் பழனிசாமி கடிதம்!

இந்த இடம் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளது என்பதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளை இணைக்கும். பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம், மதுரை வரை பயணிக்கும் தமிழ்நாடு யாத்ரீகர்களுக்கும், சபரிமலைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கும் முக்கிய ஸ்தலமாக இது அமையும். இந்த இடத்தை சுற்றி 200 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் இல்லை. அத்துடன் இந்த கோயில் மாநிலம் மற்றும் நாடு முழுவதிலுமிருந்தும் லட்சகணக்கான பக்தர்களை ஈர்க்கும்.

உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில்  – ஆந்திர முதல்வருக்கு  முதல்வர் பழனிசாமி கடிதம்!

அத்துடன் இந்த கோயிலை நிர்மாணிப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் தமிழக அரசு ஏற்கும். எனவே, கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தேவையான நிர்வாக அனுமதியை தரவேண்டும். அவ்வாறு அளிக்கும் பட்சத்தில் கட்டுமான நடவடிக்கைகள் உடனடியாக அந்த இடத்தில் தொடங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.