குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் பங்கேற்பு!

குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன்  பங்கேற்பு!

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளார். ரூபாய் 70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கோயிலில் நடக்கும் குடமுழுக்கில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன்  பங்கேற்பு!

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன . இருப்பினும் கூட்டம் கூடுவது நல்லதல்ல என்பதால் திருவிழாக்கள் கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குடமுழுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன்  பங்கேற்பு!

இதை தொடர்ந்து குடமுழுக்கு செய்ய அனுமதிக்கவேண்டும் என வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் நவம்பர் 16ஆம் தேதி முதல் குடமுழுக்கு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நூறு பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.