முதல்வர் பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!!

 

முதல்வர் பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!!

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!!

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் இது. இந்நாளில் மக்கள் குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்றும், வீடுகளில் பலகாரங்கள் செய்தும் இறைவனை வழிபடுவர்.அந்தவகையில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் தமிழகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை வடபழனி, மதுரை மீனாட்சி அம்மன், திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!!

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பும் அமைதியும் நிலவி,நலமும் வளமும் பெருகி, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் வாழ உலகெங்கும் உள்ள தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”என்று பதிவிட்டுள்ளார்.