ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறக்கிறார்!

 

ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை  திறக்கிறார்!

விராலிமலை ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில் அவரின் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களின் கொரோனா தடுப்பு பணிகளின் ஆய்வு பயணம் ரத்து செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை  திறக்கிறார்!

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு குறித்து நாளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் பழனிசாமி. அத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு நினைவு சிலையை தமிழக முதல்வர் நாளை திறந்து வைக்கவுள்ளார் . தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மாபெரும் புரட்சியை கண்டது. தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு நமது வீரமிகு விளையாட்டை மீண்டும் மீட்டு தந்தனர். அதை பிரதிபலிக்கும் வைக்கும் இந்த நினைவு சிலை இருக்கும்.

ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை  திறக்கிறார்!

அதே போல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தற்போது தீபாவளி, நவராத்திரி, தசரா என பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால் கொரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனால் இதுகுறித்து முதல்வர் புதுக்கோட்டை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது.