மீண்டும் ஊரடங்கா? கொரோனா நிலவரம் அடிப்படையில் முடிவெடுக்க திட்டம்!

மீண்டும் ஊரடங்கா? கொரோனா நிலவரம் அடிப்படையில்  முடிவெடுக்க திட்டம்!

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ சிறப்புக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மீண்டும் ஊரடங்கா? கொரோனா நிலவரம் அடிப்படையில்  முடிவெடுக்க திட்டம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் பிரிட்டனில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் சுகாதாரத்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1,000 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் வரவில்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கா? கொரோனா நிலவரம் அடிப்படையில்  முடிவெடுக்க திட்டம்!

இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ சிறப்புக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். காலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் முதல்வர் பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.