’18 மணிநேரத்தில்’ கொள்ளையர்களை பிடித்த போலீஸுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

 

’18 மணிநேரத்தில்’ கொள்ளையர்களை  பிடித்த போலீஸுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

முத்தூட் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

’18 மணிநேரத்தில்’ கொள்ளையர்களை  பிடித்த போலீஸுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அங்கிருந்த ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதில் ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, கொள்ளை கும்பலை ஹைதராபாத்தில் இன்று கைது செய்தனர். சம்பவம் நடந்து 18 மணிநேரத்தில் கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்களை 18 மணிநேரத்தில் விரைந்து பிடித்த போலீசுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். ஓசூரில் கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ தங்கத்தை துரிதமாக செயல்பட்டு போலீசார் மீட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரின் செயல்பாடு தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்