பெரியார் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

 

பெரியார் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியார் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அவரின் தொண்டர்களும் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பெரியார் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். முன்னதாக இங்குள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் வந்து மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.