தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

 

தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

அதே போல தற்போது இருக்கும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு முறை தொடரும் என்றும் தற்போது இருக்கும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவித்தார். இதன் காரணமாக தலைவர்கள் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்துவதில் தடை அமலில் இருந்தது.

தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை!

இந்நிலையில் நேற்றிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215 ஆவது நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ். பி. வேலுமணி ஆகியோர் உடனிருந்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.