டெல்லியில் 8வது தமிழ் பள்ளியை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

டெல்லியில் 8வது தமிழ் பள்ளியை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

தலைநகர் டெல்லியில் 8வதாக தமிழ் பள்ளி ஒன்றை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

டெல்லியில் 8வது தமிழ் பள்ளியை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

டெல்லி மயூர் விஹார் ஃபேஸ் 3 பகுதியில் கட்டப்பட்ட தமிழ் பள்ளிக்கூடத்தை காலை 10.45 மணிக்கு காணொலியில் திறந்து வைக்கிறார். காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

டெல்லியில் 8வது தமிழ் பள்ளியை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

ஏற்கனவே டெல்லியில் தமிழ் கல்விக்கழகம் சார்பில் 7பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இந்த 8 வது பள்ளிக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது அப்பள்ளி திறக்கப்படவுள்ளது. இங்கு வகுப்பறை, ஆய்வுக்கூடம், நூலகம் 37 அறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நிதி பற்றாக்குறையால் குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கான நிதியை தாங்களே ஏற்று கொள்வதாகவும்,பள்ளியை மூடவேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவித்தது நினைவுகூரத்தக்கது.