ஆளுநர்- முதல்வர் இடையே நடந்த அரை மணிநேரம் சந்திப்பு!

 

ஆளுநர்- முதல்வர் இடையே நடந்த அரை மணிநேரம் சந்திப்பு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். அதனால் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இதனால் சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஆளுநர் காலதாமதம் செய்ததால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை, 7.5% ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் 303 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர்- முதல்வர் இடையே நடந்த அரை மணிநேரம் சந்திப்பு!

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என பலர் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்கு ஆளுநர் பன்வாரிலாலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை 5.30 மணிக்கு சென்றார். சுமார் அரைமணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. 6 மணிக்கு ஆளுநரை சந்தித்துவிட்டு முதலமைச்சர் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே வந்தார். முதலமைச்சருடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். சந்திப்பின்போது முதலமைச்சர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்