எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மண்டலத்திற்கு தலா இரண்டு வாகனம் என்ற முறையில் 15 மண்டலங்களுக்கு 30 எல்இடி வீடியோ வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

அதேபோல கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு செல்போனில் முதல்வர் வாழ்த்து கூறும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் 10 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோக திட்டமும் ஆரம்பமானது. அத்துடன் நேப்பியர் மேம்பாலம், ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகளையும் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், எஸ். பி. வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.