‘புதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்’ : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் !

 

‘புதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்’ :  முதல்வர் பழனிசாமி  அடிக்கல் நாட்டினார் !

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

‘புதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்’ :  முதல்வர் பழனிசாமி  அடிக்கல் நாட்டினார் !

119.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, ரூ.104 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் பழனிசாமி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டியிருந்தார். 5 புதிய மாவட்டங்களில் தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை .

‘புதிய 2 மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்’ :  முதல்வர் பழனிசாமி  அடிக்கல் நாட்டினார் !

சமீபத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாகவும், வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியும், நெல்லையிலிருந்து தென்காசி மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.